மாவுப்பூச்சி: டிரஸ்க்கா மாஞ்சிஃபெரே
தாக்குதலின் விபரம:
- குஞ்சுகளும் மாவுப்பூச்சியும் இலைகள் மற்றும் பூங்கொத்துக்களை தாக்குகிறது
- குஞ்சுகள் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் காய்ந்து விடுகின்றது
- தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் தாக்கப்பட்டு கருமை நிறமாக மாறி கருகி விடுகிறது
பூச்சியின் விபரம்:
- குஞ்சுகளும் மாவுப்பூச்சியும் பழுப்பு நிறத்திலிருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- மரத்தைச் சுற்றிலும் உழுது களைகளை அகற்றிவிட வேண்டும்
- அல்கேத்தின் பாலித்தீன் சீட்டை மரத்தின் அடிப்புறத்திலிருந்த 50 செ மீ உயரத்தில் இறுக்கமாகக் கட்டிவிட வேண்டும்
- குளோர்பைரினாஸ்் தெளித்து மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்
- கிரிப்டோலோமியஸ் மான்ட்ரோசிரி போன்ற இயற்கை எதிரிகளை மரத்திற்கு பத்து வீதம் பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை அழிக்கலாம்
|