சிகப்பு அசுவினி: டாக்ஷிபாப்டிரா ஒடினே
தாக்குதலின் விபரம்:
- சிகப்பும் பழுப்பும் கலந்த பூங்கொத்துகளில் கூட்டமாக காணப்படும்.
- சிகப்பு அசுவினி இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.
- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வாடி விடுகிறது.
பூச்சியின் விபரம்:
- அசுவினி - சிவப்பு (அ) ஊதா நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட பகுதிகளை குஞ்சுகள் மற்றும் அசுவினி ஆகியவற்றோடு சேர்த்து அகற்றிவிட வேண்டும்
- டைமீத்தோயேட் (அ) மெத்தில் டெமட்டான் 1 மிலி மருந்து + 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
- காக்சினெலிட், சிம்சனஸ் போன்ற இயற்கை எதிரிகளை பயன்படுத்தி சிகப்பு அசுவினியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
|