மா காவடிப் புழு: தாலஸோடஸ் குவாடுரேரியா
தாக்குதலின் விபரம்:
- புழுக்கள் மலர்கொத்துக்களை பிணைத்து அதனுள் இருந்து மொட்டுகளை உண்ணுகிறது.
- சேதம் அதிகமாகும் நிலையில் பூங்கொத்துக்கள் காய்ந்து விடுகின்றன.
பூச்சியின் விபரம்:
- காவடிப்புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- அந்துப்பூச்சி - பழுப்பு நிறத்தில் இருக்கும், முன் இறக்கையில் வெண்ணிறப்பட்டைக்கோடு இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- கைகளினால் காவடிப்புழுவை எடுத்து அழிக்கலாம்.
- தாக்கப்பட்ட இலைகளையும் மலர்களையும் ஒன்று சேர்த்து அகற்ற வேண்டும்.
- விளக்குக் கவர்ச்சி பொறியை ஹெக்டேர்க்கு ஒன்று என்று வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- மாலத்தியான் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
|