பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆந்த்ரக்னோஸ்: கோலிட்டோட்ரைக்கம் கோலியோஸ்போரைடோஸ்

அறிகுறிகள்:

  • இந்நோய் இலைகளில் புள்ளிகளையும், மலர் மற்றும் கிளை நுனிகளில் கருகல் தன்மையையும் மற்றும் பழங்களில் அழுகல் நிலைமையையும் ஏற்படுத்துகிறது.
  • இலைகள் மற்றும் கிளைகளில் சிறிய கொப்பளம் தோன்றும்.
  • இளம் இலைகள் தளர்ந்து, உலர்ந்து உதிர்ந்து விடும்.
  • பழங்களில், கருப்பு புள்ளிகள் தோன்றி கடினமாகி சிதைவு அடைந்து விடும்.
Mango Symptom
அறிகுறிகள் இலைகளில் தாக்கம்
கோலிட்டோட்ரைக்கம் கோலியோஸ்போரைடோஸ் ஆந்த்ரக்னோஸ்

கட்டுப்பாடு:

  • அக்டோபர் மாதம் தொடங்கி 3 வாரங்கள் இடைவெளியில் ஃபுளூரசன்ஸ் கலந்து தெளிக்கவும்.
  • 5-7 முறை மலர்கள் மற்றும் மலர் கொத்துகளுக்கு தெளிக்க வேண்டும்.
  • சேமிக்கும் முன் சூடான நீரில் 15 நிமிடம் அல்லது பெனோமில் (அ) தியோபென்டோசோலில் 5 நிமிடம் வைக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015