பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் நோய்கள்

நுனி தண்டழுகல்: டிப்லோடியா நட்டலென்சிஸ்
அறிகுறிகள்:

  • காம்பின் அடிப்பகுதியைச் சுற்றியுள்ள கனிப்புறத்தோல் கருப்பாகத்தென்படும்.
  • ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி பெரிதாகி வட்ட வடிவ கருப்பு பகுதியாகக் காட்சியளிக்கும்.
  • ஈரமான சூழலில், அதிவேகமாக இரண்டு அல்லது மூன்று நாட்களில் பழம் முற்றிலும் கருப்பு நிறமாக மாறிவிடும்.
  • சதைப்பகுதி பழுப்பாகவும், ஓரளவு மென்மையாகவும் ஆகிறது.
  • காய்ந்த கிளைகள் மற்றும் மரங்களின் பட்டை மழை மூலம் பரவும்.

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட கிளைகளை அழிக்க வேண்டும் மற்றும் கார்பென்டசிம் தியோஃபனேட் மெத்தில்(0.1%) (அ) குளோராதலோனில்(0.2%) ஐ மழைக்காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

 

பாதிக்கப்பட்ட பழம்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015