வைர முதுகு அந்துப்பூச்சி: புருட்டெல்லா ஸைலோஸ்டெல்லா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்
- தாக்கப்பட்ட இலைகளின் மேற்புறத்தில் வெண்ணிறத்திட்டுகள் காணப்படும்
- வளர்ச்சியடைந்த புழு காய்களை துளைத்து உட்சென்று உண்ணுகிறது
|
|
துளை |
|
|
பூச்சியின் அடையாளம்:
- புழு: புழுக்கள் இளம் பச்சை நிறத்திலிருக்கும்
- அந்துப்பூச்சி: அந்துப்பூச்சி சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் வெண்மை நிறக்கோடுகள் இருக்கும். இறக்கைகளை மடக்கி அமர்ந்திருக்கும் போது வைரம் போன்ற புள்ளிகள் முதுகு புறத்தில் இருப்பதைக் காணலாம்.
கட்டுப்படுத்தும் முறை:
- இனக்கவர்ச்சி பொறியை ஏக்கர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
- புழுக்களை சேகரித்து அகற்ற வேண்டும்
- கோட்டீசியா புருட்டெல்லா மற்றும் டைடெக்மா செமிகிளைசம் போன்ற ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி வைரமுதுகு அந்துப் பூச்சியை நன்கு கட்டுப்படுத்தலாம்.
- வளர்ச்சியடைந்த புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதம் தூளை எக்டர்க்கு 37.5 கிலோ வீதம் தூவி புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்
|
|
அந்துப்பூச்சி |
|
|