தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்
- தாக்கப்பட்ட இலைகளின் மேற்புறத்தில் வெண்ணிறத் திட்டுகள் காணப்படும்
- வளர்ச்சியடைந்த புழு காய்களை துளைத்து உட்சென்று உண்ணுகிறது
பூச்சியின் அடையாளம்:
- புழு: பழுப்பு மஞ்சள் நிறத்தில் காணப்படும்,புழுவின் மேற்பரப்பில் கருப்பு புள்ளிகள் காணப்படும்.
- அந்துப்புச்சி: அந்துப்புச்சி பழுப்பு மஞ்சள் நிறத்தில் காணப்படும் முன் இறகானது சிவப்பு நிறத்துடன் ஆங்காங்கே சிறு வெள்ளை புள்ளிகள் காணப்படும் –பின் இறகானது கரும் சாம்பல் நிறத்துடன் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
- பாசலான் 35 EC @ 2 மி.லி/லி
- பென்வேல்ரேட் 20 EC @ 0.5 மி.லி/லி
|
|
புழுக்களால் தாக்கப்பட்ட இலை |
|
அந்துப்புச்சி |
|