பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
முட்டைகோஸ் துளைப்பான்: ஹெலுலா அன்டாலிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
இளம் புழுக்கள் இலையைத் தின்று சேதப்படுத்தும்
வளர்ச்சியடைந்த புழு இலை மற்றும் தண்டுகளைத் துளைத்து உட்சென்று சேதப்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
புழு: புழுக்கள் பழுப்புநிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் 5 ஊதா வண்ணக்கோடுகள் காணப்படும்.
அந்துப்பூச்சி: அந்துப்பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கையில் பழுப்புநிற கோடுகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
புழுக்களை சேகரித்து அழிக்கலாம்
நன்கு வளர்ச்சியடைந்த புழுவைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதம் தூளை எக்டர்க்கு 37.5 கிலோ வீதம் துவி தாக்குதலைக் குறைக்கலாம் (அல்லது) கார்பரைல் 50 WP @ 37.5 கி/ 150 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்