பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள் |
அல்டர்னேரியா கரும்புள்ளி நோய்: அல்டர்னேரியா பிரேசிகா அ. ரபனி
அறிகுறிகள்
- சாம்பல் நிற இலைப்புள்ளிகள் மத்தியில் மஞ்சள் நிறமுடைய புள்ளிகளைக் கொடுக்கும்.
- இலைகளில் காய்களிலும், செடி முதிர்யடைவதற்கு ஒரு சில வாரத்திற்கு முன் வட்டவடிவ கரும்புள்ளிகள் தோன்றும்.
- காய்கள் பாதிப்படைந்து, அதில் வளையப் புள்ளிகளாக காணப்படும். இறுதியில் உதிர்ந்துவிடும்.
கட்டுப்பாடு
- பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
- காய்கள் வயல்களில் உதிர்வதற்கு முன்னரே அறுவடை செய்ய வேண்டும். மேங்கோசெப் 0.2 சதவிகிதம் என்ற அளவில் நோய் தோன்றிய உடன் தெளிக்கவும்.
|
|
|