TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர்குடையும் நூற்புழு : ராடோபில்லஸ் சிமுலிஸ்

அறிகுறிகள்:

  • இது இடம் பெயரும் அகஒட்டுண்ணியாகும். இதன் முழுவாழ்க்கைச் சுழற்சியையும் வேரில் முடுத்து, பின் வேரை சிதைத்துவிடும்.
  • தாக்குதலின் ஆரம்ப அறிகுறி, வேரின் மேல் இரத்த சிவப்பு புண்கள் காணப்படும்.
  • நூற்புழு, சாதாரணமாக வேர் மற்றும் கிழங்குகளில் நுழைந்து சிவந்த பழுப்பு நிற புண்களை ஏற்படுத்தும்.
  • பாதிக்கப்பட்ட வேரை நீளவாக்கில் பிரித்தால் புண்களை தெளிவாக காணலாம்.
  • வேர் மற்றும் கிழங்கின் சிதைவினால், தாவரத்தின் வனர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
  • நூற்புழுவினால் ஏற்படும் புண்கள் முதன்மை வேரோடு சேர்த்து ஊன்று வேரையும் பாதிக்கிறது.
  • ராடோபிலஸ் சிமிலிஸ் பாதிப்புடன் பிசேரியம் ஆக்சிஸ்போரம் வாடல் இணைந்து இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சுருள் வடிவ நூற்புழு: ஹெலிக்கோடைலங்கஸ் மல்டிசிங்டஸ்

  • இது புற மற்றும் அக ஒட்டுண்ணியுமாகும்
  • நூற்புழுக்கள், தாவரத்தின் மேற்புறத்தோளில் உள்ள புறணிச் செல்களை உண்பதால், வேரில் புண்கள் மற்றும் சிதைவுறு புண்களை ஏற்படுத்தும்.
  • மண்ணில் நூற்புழுவின் பெருக்கத்தினால், உறிஞ்சு வேர்களை பாதிக்கிறது.
  • பாதிக்கப்பட்ட தாவரத்தின் வேர் மற்றும் கிழங்குகள் சிவந்த பழுப்பு / கருப்பு நிறத்துடன் காணப்படும்.

வேர் அழுகல் நூற்புழு – பிராட்டிலென்கஸ் காஃபியே

  • இடம்பெயரும் அகஒட்டுண்ணியாகும் மேலும் ராடோபில்லஸ் சிமுலிஸ் -யை ஒத்திருக்கும்.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட வேரின் புறணிப் பகுதி கருப்பு நிறமாக மாறிவிடும்.
வேர்புறணியின் சிதைவு வேர்களின் மீது ரத்தச் சிவப்பு நிற புண்கள் வேரோடு சாய்ந்து  நூற்புழு பாதித்த வாழை
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016