பருத்தி: மொச்சை வடிவ நூற்புழு : ரோட்டிலென்க்கஸ் ரெனிபார்மிஸ்
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட செடியின் வளர்ச்சிக் குன்றி, இலைகள் உதிர்ந்து, பழங்கள் மற்றும் விதைகளின் வடிவம் மாறிக் காணப்படும்.
- வேரின் நிறம் மாறி அழுகிக்கானப்படும்.
- மிகவும் பாதிக்கப்பட்ட செடிகள் இறந்து விடும்.
கட்டுப்பாடு :
- விதை விதைப்பின் போது கார்போபியூரான் 3ஜி மருந்தினை எக்டருக்கு 33 கிலோ மண்ணில் இடவும்
- சூடோமோனாஸ் ஃபுளூரஸென்ஸ் - விதை நேர்த்தி 10 கிராம்/கிலோ மற்றும் 2.5 கிலோ/எக்டர் மண்ணில் இடவும்
கரும்பு: ஹெலிக்கோட்டிலின்கஸ் டைகைஸ்டிரா, பிராட்டிலென்கஸ் ஜியே
கட்டுப்பாடு :
- கார்போபியூரான் 3ஜி மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ வீதம் விதை விதைத்த 15 – 30 நாட்களுக்குள் இடுதல்.
|
|