நெல் வேர் நூற்புழு: ஹிர்ச்ச்மன்னியல்லா ஒரைசே, ஹ. முக்ரோடோனேட்டா
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட வேர்கள் அதிக வெற்றிட பகுதியுடனும் துருப்பிடித்தாற் போன்றும் காணப்படும்.
- இதனால் நீர் மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளுதல் பாதிக்கிறது.
- பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
- தூர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.
கட்டுப்பாடு :
- நாற்றங்காலில் கார்போபூரான் @ 175 கிராம்/ சென்ட் நாற்றங்காலிலும், 33 கிலோ / எக்டர் வயலிலும் இடலாம்.
- சூடோமோனாஸ் புளோரஸ்ஸென்ஸ் கொண்டு விதை நேர்த்தி (10 கிராம்/கிலோ விதை), நாற்று வேர் நின நனைத்தல் (1.5 கிலோ/எக்டர்) மற்றும் வயலில் 2.5 கிலோ /எக்டர் மண்ணில் இடவும்.
|