TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள்

வெண் இலைநுனி நுாற்புழு : அபெலன்காய்ட்ஸ் பெஸ்சே

அறிகுறிகள்:

  • நெற்பயிரின் இலைகளை நூற்புழு தாக்கி சாறுண்பதால் , இலைகளின் நுனி பகுதியில் 3-5 செ.மீ வரை வெள்ளை நிறமாக மாறி பின் காய்ந்து திருகிக் காணப்படும். இதுவே 'வெண்நுனி' எனப்படுகிறது.
  • பூட்டை இலைகளின் நுனிப்பகுதி திருகிய நிலையில் வெண்மைநிறமாக காணப்படும்.
  • நுாற்புழு தாக்கிய பயிர்கள் வளர்ச்சி குன்றியும், (குட்டையாக) வீரியம் இழந்தும் காணப்படும். மேலும் கதிர்களின் அளவும் சிரியதாகும்.
  • நுாற்புழு தாக்கப்பட்ட கதிர்களில் மலட்டுத் தன்மை ஏற்பட்டு, வடிவம் சிதைந்த உமிச்செதில்கள் மற்றும் சிறிய சிதைந்த மணிகளுடன் காணப்படும். தீவிரத்தாக்குதலில் நோய் தாக்கப்பட்ட நெல்மணிகள் உள்ளீடற்ற பதராக மாறிவிடுகின்றன.
  • நுாற்புழு தாக்கப்பட்ட விதைகளை விதைக்கும் போது உறக்க நிலையில் இருக்கும் நுாற்புழுக்கள் உயிர்ப்படைந்து மெல்லிய ஈரப்படலம் மூலமாக பயிரின் மேல்பகுதியை நோக்கிச் சென்று இலை பகுதிகளில் புற ஒட்டுண்ணிகளாக இருந்து இலைச் சாற்றை உறிஞ்சி வாழும்.                     
நூற்புழு நிரம்பிய நெற்கதிர் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள்

கட்டுப்பாடு :

  • நுாற்புழு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான டிபிஎஸ் 1, டிபிஎஸ் 2, ஆகிய இரகங்களைப் பயிரிட வேண்டும்.
  • விதைகளை விதைக்கும் முன்பு, அதிலுள்ள நுாற்புழுக்களை அழிக்க விதை விதைப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் விதைகளை நன்கு ஊற வைக்க வேண்டும்
  • விதைகளை 52-53°செ வெப்ப அளவு உள்ள வெந்நீரில் 15 நிமிடங்கள் நன்கு ஊறவைத்தல் வேண்டும்.
  • நாற்று நடவு செய்வதற்கு 7 நாட்களுக்கு முன்னர், நாற்றங்காலில் ‘கார்போஃபியூரான் 3 ஜி’ 30 கிலோ/எக்டர் என்ற அளவில் இட வேண்டும்.
  • நடவு செய்து 45 நாட்களில் 'கார்டாஃப் ஹைட்ரோக்ளோரைடு' 4 ஜி' @ 25 கிலோ/எக்டர் என்ற அளவில் இட வேண்டும்.
  • வெண் நுனியிலை நூற்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு, நுாற்புழுவற்ற விதைகளையும், நுாற்புழு தாக்குதலற்ற நாற்றுக்களையும் பயன்படுத்த வேண்டும்.
  • பயிர் அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியிருக்கும் தாக்கப்பட்ட விதைகள், களைகள், பயிர்த்துார்கள் ஆகியவற்றை வயலிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும்.       
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016