சோளத்தை தாக்கும் நூற்புழுக்கள்
- சோளம் ஸ்டிங் நூற்புழு, குட்டைவேர் நூற்புழு, லீசன் நூற்புழு மற்றும் வளைய நூற்புழு போன்றவற்றிற்கு விருந்தோம்பிப் பயிராகும்.
- இந்தநூற்புழுக்களால் சேதம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் ஒரேபயிரை பலவருடங்களுக்குத் தொடர்ந்து பயிர் செய்தால் பாதிப்பு ஏற்படும்.
- சிறுதானியங்களிலிருந்து சோளம் நூற்புழுக்களை பகிர்கின்றது. இந்தபயிர்கள் ஒரேநிலத்தில் பயிரிடப்பட்டால் சோளம் நூற்புழுக்களால் பாதிக்கப்படும்.
அறிகுறிகள்:
- வளர்ச்சிகுறைதல், தண்டுகள் மெலிதாகுதல், முதிர்வதற்கு முன் பேமிதமான வெப்பநிலையிலேயே வாடுதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை நூற்புழுக்களால் ஏற்படும்
- பாதிப்பின் அறிகுறிகள, நூற்புழுக்களின் எண்ணிக்கை விளை நிலத்தில் வெகுகுறைந்த தூரத்திலேயே மாறுபடுகின்றன.
- வளர்ச்சிகுறைதல், உற்பத்திகுறைதல் மற்றும் மற்ற அறிகுறிகள் வடிவம், அளவு போன்றவற்றில் மாறுபடும்.
|