காய் வடு நூற்புழு (காளஹஸ்தி நோய்) : டைலென்கோரென்கஸ் பிரேவெல்லினியேட்டஸ்
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளுத்து வளர்ச்சி குன்றிக் காணப்படும்.
- சிறிய, பழுப்பு நிற வடுக்கள் முளைகளிலும் வளரும் காய்களிலும் காணப்படும்.
- மிகவும் பாதிப்படைந்த செடியின் விதைகள் முழுவதும் கருப்பு நிறத்தில் காணப்படும்
- தாவரத்தின் வேர் நிறம் மாறிக் காணப்படும்
கட்டுப்பாடு
- எதிர்ப்புத்திறன் கொண்ட தாவர இரகங்களைப் பயன்படுத்தவும்.
- நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்
- விதை விதைத்து 25 - 30 நாட்களுக்குப் பின், கார்போபியூரான் 3G 33 கிலோ/எக்டர் மண்ணில் இடவும்.
- 200 கிலோ / எக்டர் ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் செய்யவும்
|
|