TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: பயிர் வகைகளைத் தாக்கும் நூற்புழுக்கள்

துவரை முட்டைக்கூடு நுாற்புழு : ஹெட்டிரோடிரா கஜானி

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாகி, வளர்ச்சி குன்றிக்காணப்படும். பயிரின் வளர்ச்சி குறைந்து காய்களின் எண்ணிக்கை குறையும்.
  • துவரை, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ், உளுந்து மற்றும் எள் போன்ற பல பயிர்கள் இந்நூற்புழுவால் பாதிக்கப்படுகின்றன.
  • பயிரின் இளம் பருவத்தில், முத்து போன்ற (அ) எலுமிச்சை வடிவ வெள்ளைப் பெண் நூற்புழுக்கள் வேருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும்

கட்டுப்பாடு :

  • கோடை காலங்களில் ஆழ் உழவு செய்தல் வேண்டும்.
  • 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்தல் வேண்டும்.
  • விதைக்கும் போது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (அ) டிரைகோடெர்மா விரிடி @ 2.5 கிலோ/ எக்டர் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.      
  • ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி @ 5 + 5 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016