நாற்றாங்காலிலுள்ள பூச்சி:
நாவாய்ப்பூச்சி: கார்வல்ஹோயா அரிக்கே
சேதத்தின் அறிகுறிகள்:
- நடுக்குறுத்து இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
- இலைகள் காய்ந்து விழுந்துவிடும்
- நடுக்குறுத்து வளர்ச்சி குன்றி சுருங்கி விரிய முடியாமல் போகும்
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சுகள்: கரு ஊதா நிறம் உடலில் தலைப்பகுதி இளம்மஞ்சளாகவும், சிவப்புநிற கண்களும் பெற்றிருக்கும்
- வளர்ந்த புழுக்கள்: வயிற்றுப்பகுதியில் கருப்புநிறம் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- ஃபோரேட் 10 சத குறுணை 2 கிராம் அளவில் ஒரு பாலிதீன் பையில் போட்டு அப்பையை சிறு துளையிட்டு நடுக்குருத்துப் பகுதியில் போட்டு வைக்கவேண்டும்.
|
|