எலி: டட்டிரா இன்டிகா
சேதத்தின் அறிகுறிகள்:
- எலிகள் பனைமரத்தை குடைந்து எலி வலையை உருவாக்கும்
- பனையின் மத்திய பகுதியில் உள்ள இனிப்பான பகுதியை உண்டு சேதப்படுத்தும்
- எலியின் தாக்குதல் வெளியில் தெரியாது ஆனால் இலைகள் திடீரென்று வாடி காய்ந்துவிடும். சில நேரங்களில் பனைமரம் இறந்துவிடும்
எலியை கட்டுப்படுத்தும் முறைகள்:
- பழத்தோட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
- எலிகளின் தாக்கம் உள்ள பகுதியை 22 காஜ் கால்வனைஸ்டு இரும்பு வலையை பனைமரத்தின் அடிப்பகுதியில் சுற்றவேண்டும்
- எலிபொறிகள் வைத்து கவர்ந்து அழிக்கலாம்
- நச்சு உணவுகளாக ஜிங்ஃபாஸ்பைடு அல்லது ஃப்ரோமோடைலான் (அ) வார்பரின் அல்லது பியூமரின்
- இரை விழுங்கிகளான பாம்பு, கழுகு, ஆந்தை, கீரி, பூனை மற்றும் நாய்களை பழத்தோட்டத்தில் இயற்கையாக கட்டுப்படுத்துகிறது
|