சேதத்தின் விபரம்:
- பூச்சி தாக்குதலின் முதல் அறிகுறி - வெங்காய இலைகள் வாடும் பிறகு, இலைகள் தளர்வுற்று, இலைகுலைந்துவிடும்.
- வெங்காய குமிழ்கள் வளர்ச்சி சிதைவுற்று, அதன் திசுக்கள் அழுகியும், வியாபாரத்திற்கு தகுதியற்றதாக்கிவிடும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை : நீண்ட வெண்ணிற முட்டை, வெங்காயத்தின் அடிப்பகுதியில் மண்ணிற்கு அருகில் இடும்.
- ஈ இனப்புழு : வெண்ணிறத்தில் கால்களற்றது.
- கூட்டுப்புழு : கூட்டுப்புழு பருவம் மண்ணில் மேற்கொள்ளும்.
- பூச்சி : சாம்பல் நிற இறக்கையுடன் உள்ள ஈ.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- சீரான பயிர்சுழற்ச்சி முறை பின்பற்ற வேண்டும்.
- நடவுக்கு முன்பு திமெட்டை மண்ணில் இடவும் (அ) மாலத்தியான் 1 லிட்டர் / ஹெக்டேருக்கு தெளிக்கவும்.
|
|
|
உருமாறிய வளர்ச்சி |
அழுகுதல் |
|