ஊதா கொப்புள நோய்: ஆல்டர்னேரியா பொரி
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகளின் முனையில் வெள்ளையான சிறிய புள்ளிகள் ஒழுங்கற்ற சோகை உடன் காணப்படும்
- வட்ட அல்லது நீள்சதுரம் வடிவில் அடர்ந்த மிருதுவான கருப்பு வளையங்கள் சோகை பகுதியில் தோன்றும்
- இலைகளில் புண்கள் கீழ்நோக்கி பரவும்
- முனையில் இருந்து கீழ்நோக்கி இலைகள் காயுந்து பின்பு உடைந்து தொங்கி விடும்
- குமிழ்கள்- அரை நீர்த்தன்மையான அழுகல், குமிழின் செதில்கள் சுருங்கி, காய்ந்து, காகிதம் போல் ஆகிவிடும்்
|
|
|
|
|
|
வெள்ளையான சிறிய புள்ளிகள் |
அடர்ந்த கருப்பு வளையம் |
ஊதா கொப்புள நோய |
|
நோய் காரணி:
- மைசிலியம்- கிளைகள் கொண்டு, நிறத்துடன் குறுக்குச்சுவருடையது
- கொநிடியோபோர்கள் தனியாக அல்லது குட்டமாக குறுக்குச்சுவருடன் வெளிர் பழுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்
- கொநிடியோ- தனித்து, நேராக அல்லது வளைவாக இருக்கும்
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- வயலில் இருந்து சேகரிக்கப்பட்ட குமிழ்கள் மூலம் பரவும்
- முக்கியமாக காற்று மூலம் பரவுகிறது
- நோய் பரப்பும் கிருமி இலைத்துளைகள் அல்லது காயங்கள் மூலம் நுழைகிறது
- செடி, கொடி கழிவுகளில் 8 மாதங்களுக்கு உயிர் வாழும்
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- வெப்பநிலை- 21- 30 °C
- ஈரப்பதம்- 90 %
|
கட்டுப்படுத்தும் முறை:
- விதை நேர்த்தி - திறம் @ 2.5 கிராம் /கிலோ
- 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைட் கொண்டு மூன்று முறை தெளித்தல், 0.2 % க்லோரோதாலேனில், 0.2 % ஜிநேப்
- 0.2 % மேன்கோசெப்
- எதிர்ப்பு வகைகள்- நியு செலேக்சன், ரெட் கிரியோல்
|
Source of Images:
http://www.apsnet.org/publications/imageresources/Pages/fi00190.aspx
http://www.ipm.ucdavis.edu/PMG/A/D-OG-APOR-FO.001.html |