பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்
அடித்தாள் அழுகல் நோய்: ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை செபே
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின் மெதுவாக காய ஆரம்பிக்கும்
  • தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும்
  • செடியின் இலைப்பரப்பு முழுவதும் வாடும்
  • வெங்காயம் குமிழ் மென்மையாகி அழுகும். வேர்கள் அழுகும்
  • வெள்ளை நிற பூஞ்சாண வளர்ச்சி இதன் மேல் தோன்றும்
  • இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் காணப்படும்
     
  மஞ்சள் இலைகள்   நுனி இல்லை வாடுதல்   அழுகிய வெங்காயம்

நோயினைகண்டறிதல்:

  • பூஞ்சாணம் ஒரு செல் மெல்லிய சுவர் ம்ய்க்ரோகொநிடியாவையும் மற்றும் தடித்த சுவர் போன்ற பல கிலாமிடோச்போறேகளை  உருவாக்குகிறது.

       
  ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை செபே   ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் கோநிடியா    

 

கட்டுப்படுத்தும் முறை:

  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்
  • அறுவடை செய்த வெங்காயக் குமிழ்களை சுத்தமாக சேமிக்க வேண்டும்
  • மண்ணில் தாமிர அளவுகள் குறையும் போது வெங்காயம் நோய்க்கு ஆளாகும். அதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும்
  • தாமிர ஆக்ஸிகுளோரைடு 0.25% மண்ணில் நனைத்து இடவேண்டும்.

Source:

Images: http://aces.nmsu.edu/pubs/_circulars/CR538/welcome.html
microscopic images: http://www.snipview.com/q/Fusarium_oxysporum_f.sp._cepae
,
http://botany.upol.cz/atlasy/system/gallery.php?entry=Fusarium+oxysporum


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015