பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்
இலைக்கருகல் நோய் : போடிட்ரிடிஸ் வகை
தாக்குதலின் அறிகுறிகள்:
  • குளிர் பிரதேசங்களில் வளரும் வெங்காயப் பயிர்களில் இலைக் கருகல்நோய் ஒரு முக்கியமான நோயாகும்்
  • மிதமான தாக்குதல் விளைச்சலைப் பாதிக்காது. ஆனால் அதிக தாக்குதல் விளைச்சலை வெகுவாகக் குறைக்கும்
  • இலைப்பரப்பில்  நூற்றுக்கும் அதிகமான வெள்ளை நிறப்புள்ளிகள் தோன்றும்
  • இந்த நோய் வேகமாகப் பரவி, செடியின் அனைத்து பகுதியும் மடியும்
     
  இலைகளில் வெள்ளை நிற நூற்றுக்கும   அழுகிய வெங்காயம்   பாதிக்கப்பட்ட வெங்காயம்

நோயினைகண்டறிதல்:

  • போற்றீடிஸ் கோன்டியோபோர்கள் திராட்சை கொத்துகள் வடிவத்தில் இருக்கும்.  கோன்டியோபோர்கள் உயரமாக், நிமிர்ந்து மற்றும் கிளைகள் அலது இரு பாகமாக் பிறந்து இருக்கும். இவைகள் கருபாக் செப்டடே உடன் இருக்கும்.  முனை செல்கள் தடித்து அதிலிருந்து ச்போரோகீனஸ் அம்புல்லா வெளிவரும். ஒவொரு  அம்புல்லாவில் இருந்து பல  கோநிடியாகள் எழுகின்றன. கோநிடியாகள் கண்ணாடி அலது நிறச்சாயல் போன்ற இருக்கும் மற்றும் செப்டடே அலாது கோள வடிவு முதல் முட்டை வடிவத்தில் இருக்கும்.

       
  போடிட்ரிடிஸ் வகை   போற்றீடிஸ் கோன்டியோபோர்கள்    

 

கட்டுப்படுத்தும் முறை:

  • கேப்டான் திரம் 0.25%என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்்
  • மேனேப் (அ) மேன்கோசெப்(அ) குளோரோதேலோனில் தெளிக்க வேண்டும்
  • பூஞ்சாணக்கொல்லிகளை ஒவ்வொரு முறையும் 5-7 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

Source:

Images: http://aces.nmsu.edu/pubs/_circulars/CR538/welcome.html, http://www.padil.gov.au/pests-and-diseases/pest/main/136568/1837
Microscopicimages:http://www.padil.gov.au/pests-and-diseases/pest/main/136568/1843, http://www.plantmanagementnetwork.org/pub/php/diagnosticguide/2006/pears/


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015