பயிர் பாதுகாப்பு :: ஆர்கிட்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
செதிள் பூச்சி: டையாஸ்பிஸ் பயாஸ்டுவாலி
அறிகுறிகள்:
  • இளம் பூச்சிகள் மற்றும் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • இலைகள் மற்றும் போலி குமிழ்த் தண்டுகளை சேதமடையச் செய்யும்
  • தேன் சுரப்பு கசிவதால் கரும் புகை பூசண வளர்ச்சி தோன்றும் .
  • இலைகள் மஞ்சளாதல்
  • இலைகள் வாடிபின் காயும்.
  • கேட்டியா மற்றும் சிம்பிடியம் பொதுவாக காணப்படும்.

கட்டுப்பாடு:

  • பயிர் குப்பைகளின் வேர்ச்சாறு பயன்படுத்துதல்.
  • மண்எண்ணெய் ரோசின் சோப் 15கிராம் /லிட்டர் தெளித்தல்.
  • பச்சை இறகு இறக்கை பூச்சியின் புழு கிரைசோபெர்லா கார்னியாவை தோட்டத்தில் வெளிவிடுதல்.
  • இரைவிழுங்கியான பொறி வண்டு கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி, ஸ்கிம்னஸ் வகைகளை பாதுகாத்தல்.
  • மாலத்தியான் 50 கிகி (அ) பேசோலோன் 35 கிகி (அ) மீத்தைல் டெமட்டான் 25 கிகி 1 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015