பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள் |
இலைக்கருகல் நோய் : மைக்ரோடோச்சியம் ஒரைசே |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலை நுனியிலிருந்து கீழ்நோக்கி மங்கிய அல்லது கரும்பழுப்பு நிறத்துடன் புள்ளிகள் காணப்படும்.
- முதிர்ந்த இலைகளில் வெளிரிய பழுப்பு நிற நீள வடிவமுடைய ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகள் காணப்படும்.
- இலைத்தாளில் பல புள்ளிகள் இணைந்து, பின் இறுதியில் இலைகள் கருகிவிடும்.
- நோய் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து பின் இலைகள் கருகியது போன்று காட்சியளிக்கும்.
- ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய இலை நுனிகள் மற்றும் இலை ஓரங்கள். நோய் தாக்கப்பட்ட இலை நுனிகளில் நடுநரம்பின் அருகில் பிளவு ஏற்படும்.
- குறிப்பாக அதிக காற்றின் போது இலைநுனிப்பிளவுகள் பெருமளவில் காணப்படும்.
|
|
|
|
|
|
|
மங்கிய அல்லது கரும்பழுப்பு நைவுப்புண் |
|
நீள் சதுர வடிவ நைவுப்புண் |
|
|
|
|
நோய்க் காரணி:
- பூசணத்தின் மேல்பரப்பில் பூசண இழைச் சிதில்கள் உருவாகின்றன. இவை வில் வடிவத்திலிருந்து நிலா வடிவமாகவும், இளமையாக இருக்கும்போது ஒற்றை உயிரணு (திசு) கொண்டது.
- முதிர்ச்சி நிலையில் 2 உயிரணுக்களுடனும் அவ்வபோது 2-3 குறுக்குச் சுவருடனும் காணப்படும். ஆஸ்கஸ் நீள உருளை வடிவத்திலிருந்து குண்டாந்தடி வடிவமாகவும், ஒருகுமிலுடனும் காணப்படும்.
- (அஸ்கஸின் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்கள் ஏறக்குறைய விறைப்பானதாக இருக்கும். மேலும் அவை பூசணவித்துக்கள் வெளிவரும்போதும் பிரியாது). அஸ்கோஸ்போர்ஸ் (பூசண இழைகள்) ஒன்றாக இணைந்தும், நிமிர்ந்தும், சற்று வளைந்தும், 3-5 குறுக்குச் சுவருடனும் காணப்படும்.
|
கட்டுப்பாடு:
- அதிகளவு உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- கார்பென்டசீம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- மேன்கோசிப் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடு, ஆகிய ஏதாவது ஒன்றை இலைவழி உரமாக அளிக்கவேண்டும்
|
|
|