பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்
தானியம் நிறமற்ற சிதைவடைதல்

டிரஸ்சிலேரியா ஒரைசே, கர்வுலேரியா லுனேடா, ஃப்யுசெரியம் மொனிலிபார்மி

அறிகுறிகள்:

  • அறுவடை காலத்திற்குள் முன்போ அல்லது பின்போ தானியங்கள் நிறமாற்ற நோயினால் பாதிக்கபடுகிறது. அவை இடம் மற்றும் காலநிலை பொறுத்து அதிகமாகிறது.
  • இந்நோய் தாக்குதலானது நெல்மணியின் உட்புறம் அல்லது வெளிப்புறம் காணப்படும்.
  • அடர் பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிற புள்ளிகளாக தானியங்கள் மீது தோன்றும்.
  • பயிரை தாக்கும் நோய் காரணி மற்றும் அதன் பாதிப்பைப் பொறுத்தே தானியங்களில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு அல்லது கருப்பு நிறத்தில் நிறமாற்றம் அடைகிறது.
 

கட்டுப்பாடு:

  • அதிகளவு நைட்ரஜன் உரங்கள் அளிப்பதை தவிர்க்கவும்
  • கதிர் பூக்கும் பருவத்தில் கார்பென்டசிம் + திரம் + மேன்கொசெப் (1 : 1 : 1) 0.2 சதவீதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016