சிவப்பு கூன் வண்டு:
சிவப்பு கூன் வண்டானது, எண்ணை பனை பயிர் செய்யப்படும் அனைத்துப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும் மரமானது முழுவதுமாக காய்ந்து மடிந்து விடுகிறது. இவ்வண்டின் புழுக்களானது பனையின் தண்டுப் பகுதியின் உட்பகுதியியல் உண்ணுகின்றன. இலைகள் மஞ்சளாகி கொஞ்சம் கொஞ்சமாக மரம் முழுமையாக காய்ந்து விடுகின்றது.
கட்டுப்படுத்தும் முறைகள்
வயலை சுத்தமாக பராமரிக்கவேண்டும். ஊடுபயிரை நெருக்கமாக பயிர் செய்யக்கூடாது.
சிவப்பு கூன் வண்டு தாக்குதலுக்குள்ளான எண்ணை பனையில் சேதாரம் அதிகபட்சம் காணப்படும் சூழலில் மரம் ஒன்றுக்கு 5 முதல் 8 மில்லி மேனோ குரோட்டோபாஸ் மருந்தினை ஊசி மூலம் செலுத்தி கட்டுப்படுத்தவேண்டும்.
எலித் தொல்லை
எண்ணை பனை நாற்றாங்காலில் எலிகளின் தொல்லைகள் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் கன்றுகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த சிங் பாஸ்பேட், அலுமினியம் பாஸ்பேட், டையலான் போன்ற எலி மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் எலிகளை பிடித்து அழிக்க பிரத்யேகமாக உள்ள கிட்டிகளை பயன்படுத்தலாம். |