வெள்ளை ஈ: பெமிசியா டேபேசி
அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் மற்றும் வண்டுகள் இலையின் அடிப்புறத்திலிருந்து சாற்றை உறிஞ்சும்
- இலைகள் மஞ்சள் நிறமாதல்
பூச்சியின் விபரம்:
- முட்டை – இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- இளம் பூச்சி – நீள் வட்டமாக, செதில் போன்று, பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.
- இலையின் சதைப்பான பகுதியில் தங்கியிருக்கும்.
- வண்டு – வெள்ளை நிறத்தில், சிறியதாக, செதில் போன்று இருக்கும்.
கட்டுப்பாடு :
- வயலை சுகாதாரமாக வைத்தல்
- ஓம்புயிரி பயிர்களை அகற்றுதல்
- மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை அமைத்தல்
- இமிடாகுளோபிரிட் 200 எஸ்.எல் 0.01% (அ) டிரைஅசோபாஸ் 40 கிகி 0.06% தெளித்தல்
- வேப்பஎண்ணெய் 3% (அ) வேப்பங்கொட்டை சாறு 5% தெளித்தல்
- இரை விழுங்கிகளான காக்கிநெல்லிட், கிரிப்டோலேமஸ் மான்டோசோரிகளை வயலில் விடுதல்
- ஒட்டுண்ணிகளான என்கார்சியா ஹேட்டரிஸிஸ், எ.குவாடெலோட்பே வயலில் வெளிவிடுதல்.
|
|