பயிர் பாதுகாப்பு ::பப்பாளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழஈ: பேக்ட்ரோ டார்சாலிஸ்

அறிகுறிகள்:

  • பகுதி முதிர்ச்சி அடைந்த பழங்களை முட்டைகள் துளைபோட்டு அழுகிய புள்ளிகளை ஏற்படுத்தும்.
  • திரவம் வடிதல், பழங்களில் பழுப்புநிற அழுகிய திட்டுக்கள் காணப்படும்.
  • பழங்கள் உதிர்ந்து விடும்.

பூச்சியின் விபரம்:   

  • புழு : மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • பூச்சி : இளம்பழுப்பு நிறத்தில், கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும்.
கட்டுப்பாடு:
  • கீழே விழும்  தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து மண்ணில்குழி தோண்டி புதைக்க வேண்டும்.
  • கோடை உழவு செய்தல்
  • மீத்தைல் யூசினால் இனக்கவர்ச்சி பொறி அமைத்தல்
  • பைரத்திரம் (அ) பி.எச.சி. தூவுதல் (அ) தெளித்தல்
  • பென்தியான் 100 கிகி 2மிலி/லிட்டர் (அ) மாலத்தியான் 50 கிகி 2மிலி/லிட்டர் தெளித்தல்
  • இயற்கை எதிரிகளை ஒபியஸ் கம்பன்சேட்ஸ், ஸ்பேலேன்சியா பிலிப்பைன்ஸ்ஸை வயலில் வெளிவிடுதல்.

குறிப்பு :

  • இனக் கவர்ச்சிப் பொறி தயாரித்தல்
  • மீத்தைல் யூஜினால் 1% ஐ மாலத்தியான் 0.1% உடன் கலந்து தயாரிக்க வேண்டும்.
  • ஒரு பொறிக்கு 10 மிலி. கலவை எடுத்து, 25 இடங்களில் ஒரு எக்டருக்கு காலை 6 மணி முதல் 8 மணி இடைவெளியில் வைக்க வேண்டும்.
  • 250 மிலி. அளவுடைய அகலமான வாயைக் கொண்ட பாட்டிலை தொங்கும் நிலையில்  பொருத்த வேண்டும்.
  • மார்ச்சிலிருந்து ஜீலை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை கரைசலை

 

புழு      
பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015