பச்சை பீச் அசுவினி : மைசஸ் பெர்சிகே
அறிகுறிகள்:
- இளம்பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகள், காம்புகள், பழங்களின் சாற்றை உறிஞ்சும்.
- இலைகள் சுருண்டு, உதிரும்
- பழங்கள் முதிர்வதற்கு முன்பே உதிரும்.
பூச்சியின் விபரம்:
- பூச்சி : அடர் பழுப்பு நிறத்திலிருந்து சாக்கலெட் பழுப்பு நிறமாகி இருக்கும்.
கட்டுப்பாடு:
- தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
- டைமெத்தோயேட் 0.03% (அ) மீத்தைல் டெமட்டான் 0.02% தெளிக்க வேண்டும்.
- ஒட்டுண்ணிகளான ஏப்மிலினஸ் மாலி, இரை விழுங்கிகளான காக்சினெல்லா செப்டம்பங்க்டேட்டாவை வயலில் வெளி விடுதல்.
|
|