பயிர் பாதுகாப்பு மைய இயக்ககம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 641 003
ஏன் கிளர்ச்சியானது?
- அதிகப்படியான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துதல்
- பலவற்றில் உயிர் வாழுதல் மற்றும் அதிக வாழும் நிலையைக் கொண்டது
- பலதரப்பட்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல்
- காக்டெய்ல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல்
- அதிக இனப்பெருக்கத்திறன் கொண்டது
- மெழுகு போன்ற பாதுகாப்பான உறை இருப்பதால், பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் போது தடையாக உள்ளது
- காலநிலை மாற்றம் - வெப்பநிலை மற்றும் கார்பன் - டை ஆக்ஸைடு மட்டங்கள் உயர்வதால்
கட்டுபடுத்துவதற்கான உத்திகள்:
- ஒழுங்காக, சரியான நேரத்தில் கண்காணித்தல்
- பூச்சி உருவாவதற்கு முன்பே கட்டுபடுத்த வேண்டும். பூச்சி உள்ள இடத்தில் மட்டும் அளிக்க வேண்டும்
- அதிக அளவுடைய தெளிப்பான்களைக் கொண்டு தெளிக்க வேண்டும்
- மேற்பரப்பில் பரவும் பொருளை சேர்க்க வேண்டும்
- பைரிதராய்களை தவிர்க்க வேண்டும்
- காக்டெய்லை தவிர்க்க வேண்டும்
- கலவைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
- இலைகள், பூக்கள், பழங்களின் அடிப்பரப்பில் தெளிக்க வேண்டும்
- எறும்பு கட்டுப்பாடு
- ஒன்றுபட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும்
மேலாண்மை
- மாற்று களை ஒம்புயிரிகளை அகற்ற வேண்டும்
- பயிரின் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
- பூச்சி நடமாட்டத்தை ஒழுங்கான இடைவெளியில் கண்காணிக்க வேண்டும்
- ஆரம்ப நிலையிலேயே மேலாண்மை செய்ய வேண்டும்
- ஒட்டுண்ணி மற்றும் வேட்டையாடும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பல பொறி வண்டுகள் மற்றும் ஹைமானப்டிரா பூச்சியில் வரிசை குறைகள் வேட்டையாடும் அல்லது ஒட்டுண்ணியாக இதன்மேல் வளரும்.
- லைக்னேட் வேட்டையாடும் பூச்சி : ஸ்பேல்ஜிஸ் எபியஸ் புழு மாவுப்பூச்சியின் பல நிலைகளை அதிவேகமாக உண்ணும். இந்த பூச்சிகள் காட்டு மல்பெர்ரி, மோரஸ் வகைகளில் அதிகம் காணப்படுகிறது. இதை சேகரித்து தேவைப்படும் இடங்களில் வெளியிடலாம்.
- இயற்கை எதிரிகளின் நடமாட்டம் இருந்தால், கட்டுப்பாடு முறைகளை காலம் தள்ளி மேற்கொள்ளலாம்
- தேவைப்படும் இடங்களில், தாவர பூச்சிக்கொல்லிகளை வேம்பிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் - வேப்ப எண்ணெய் 2% வேப்பங்கொட்டை சாறு 5 % மீன் எண்ணெய் சோப் 25 கி /லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம்.
- பூச்சித்தாக்குதலின் அதிகமாகும் போது, பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் தெளிக்கலாம்
- ப்ரோபேனோ பாஸ் 50 இ.சி - 2 மி.லி /லிட்டர்
- குளோர்பைரிபாஸ் 20 இ.சி - 2 மி.லி/ லிட்டர்
- ப்யூப்ரோபெசின் 25 எஸ்.சி - 2 மி.லி/லிட்டர்
- டைமெத்தூயேட் 30 இ.சி - -2 மி.லி/லிட்டர்
- தையோமெத்தோக்ஸம் 25 - 0.6 கிராம் /லிட்டர்
- இமிடாக்ளோபிரிட்ட 17.8 எஸ்.எல் - 0.6. மி.லி /லிட்டர்
- ப்ரோபெனோபாஸ் (அ) டைமெத்தோயேட்டை, வேப்பஎண்ணெய் 20 மி.லி
- (அ) நிம்பிஸிடின் 10000 பிபிஎம் 2 மி.லி /லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும்
- 1 மி.லி டீபால் (அ) ஜேண்டோவிட் /லிட்டர் சேர்க்க வேண்டும்
- பதினைந்து நாட்களுக்கு பிறகு, புழுக்கள் எதும் உருவாகியிருந்தால் இரண்டாவது தடவை தெளிக்க வேண்டும்
மேலும் தகவலுக்கு : இயக்குநர் (கி.பி.பி.எஸ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 3 தொலைபேசி : 0422-6611237
மின்னஞ்சல் : directorcpps@tnau.ac.in
மாவுப்பூச்சி மற்றும் அதன் மேலாண்மை பப்பாளி
பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் வில்லியம்ஸ் மற்றும் கிரேனேரா டி வில்லியிங்க்
மாவுப்பூச்சியின் குடும்பம் -சூடோகாக்ஸிடே : சூப்பர் குடும்பம்
காக்ஸிடே, வகை - ஹெமிப்டிரா
பூச்சியின் தோற்றம்
- சிறிய முதல் மிதமான அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள பூசு்சிகளின் மீது மாவு அல்லது மெழுனு போன்ற முடி இருக்கும்
- 2.2 மி.மி. நீளமும், 1.5 மி.மி அகலமும் உடையது
- மாவு போன்று முடியிருப்பதால் இதன் உண்மையான நிறத்தை தெரிந்த கொள்வது கடினமாக உள்ளது
- நீள் வட்டத்தில் அல்லது நீளவாக்கில் 17 சோடி பக்கவாட்டு இழைகள் மற்றும் இறுதியில் மெழுகு இழைகள், இருப்பதால் இது குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தது என்ற அறியலாம்
வாழ்க்கை சுழற்சி
படம் கருப்பை :
- பெண் பூச்சியில் 4 நிலைகள் உள்ளன
- முட்டை - புழு நிலை - புழு நிலை முதிர்பூசு்சி
- ஆண் பூச்சியில் 6 நிலைகள் உள்ளன
- முட்டை - புழு நிலை புழு நிலை முன்கூட்டுப்புழு நிலை கூட்டுப்புழு முதிர்ப்பூச்சி
- முதல் வளர்நிலை புழுவை உளர்ப் புழு என்கிறோம்.
- இந்த நிலையில் நடமாட்டம் அதிகமாக இருக்கும். முட்டை பொரிந்தவுடன், ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து, உண்ண தொடங்கும். அதன் பிறகு எந்தவிதமான நடமாட்டமும் இருக்காது.
- முதிர்ந்த ஆண்பூச்சி தனிப்பட்ட தலை, மார்பு, வயிறு மற்றும் நடுமார்பில் ஒரு ஜோடி இழை போன்ற இறக்கைகளுடனும், இரண்டாவது ஜோடி ஈக்களின் குறுகிய இறக்கைகள் போன்று மாறியிருக்கும்.
- ஆண்பூச்சிகள் குறைந்த வாழ்நாள் உடையது. உணவு ஊட்டாது. இனப்பெருக்கம் மட்டும் செய்து பின் இறந்துவிடும்
|
|
|
|
|
கருப்பை |
முட்டை |
ஊர்ப்புழு |
முதிர் பெண்பூச்சி |
முதிர் ஆண்பூச்சி |
அறிகுறிகள்
- தாக்கப்பட்ட பகுதிகள் பசுங்சோகையாக மாறும். பின் பழுப்பு நிறமாக மாறி, முடிவில் இறந்துவிடும்
- இந்த பூச்சிகள் தேன் சுரப்பை வெளிப்படுத்தும். இதனால் தாக்கப்பட்ட பகுதிகள் பளபளப்புடன், ஈரமாகவும் தோன்றும்.
- இரண்டாவது தாக்குதல் கரும்புகை பூசணத்தால், (கேப்னோடியம்) தாக்கப்பட்ட பகுதிகளை சுற்றி கருப்பு நிறமாக மாறும்
மாவுப் பூச்சிகள் தாக்குதலின் ஆரம்பத்தில் உள்ள அறிகுறிகளை பின்வருமாறு காணலாம்
- இலைகள் மஞ்சள் நிறமாதல்
- தாக்கப்பட்ட பகுதிகள் உருமாறியிருக்கும் குட்டை இலை வளர்ச்சி மற்றும் இலை, பழங்கள் உதிர்தல்
- சிவப்பு கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருத்தல்
- தேன்தளி தத்துப்பூச்சிகளின் கழிவுப்பொருள் இருந்தல்
- கரும்புகை பூசணத்தால் பூசண வளர்ச்சி தோன்றுதல்
- செடிகளை முடிவில் அழித்தல்
இனப்பெருக்கம்
- முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவை
- உடலின் கீழ்ப்பகுதியில் வயிற்றின் கடைசிப்பகுதியில் 200-300 என்ற அளவில் கருப்பையில் முட்டைகள் இடப்படுகின்றன
- ஒவ்வொரு பெண் பூச்சியும் 400 முதல் 500 முட்டைகளை இடும்
- இளம் பூச்சிகள் முதிர்பூச்சிகளாக மாற ஒரு மாத காலம் ஆகிறது
- முதிர்பூச்சிகள் சூழ்நிலையைப் பொறுத்து 30லிருந்து 60 நாட்கள் வரை உயிர் வாழும்
- கீழ்ப்புறம், இலைகளின் கீழ்ப்புறம் இலை கணு இடுக்குகள், பூ மொட்டுக்கள், பழங்கள் மற்றும் அரிதாக வேர்களில் காணப்படும்
- மாற்று ஒம்புயிரிகள்
- பருத்தி ப்ளூபேரியா அல்பா களை அபுடில்லான்
- கொய்யா காட்டாமணக்கு களை கேலொ
- அரளி பார்த்தினியம் துவரை டெக்மோஸ்டேன்ஸ் காட்டு மல்பெர்ரி
சொலேனம் வகைகள்
வயலில் அடையாளம் காணுதல்
- ஒரு வெள்ளைத் தாளில் மாவுப்பூச்சியை வைத்து அழுத்தினால் மஞ்சள் நிறமாக மாறும். இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி.
- ஆல்கஹாலுக்கு மாற்றினால், மாவுப்பூச்சியின் உடல் கருப்பு நிறமாக மாறும்
- முட்டை : மஞ்சள் நிறத்தில் , கருப்பையில் இடும். மூன்று முதல் 4 நான்கு மடங்கு நீளமாக உடல் இருக்கும். உடல் முழுவதும் வெள்ளை மெழுகால் மூடப்பட்டிருக்கும். முட்டையின் காலம் 2-7 நாட்கள்
- இளம்பூச்சிகள் : மஞ்சள் நிறத்தில் 4-5 வளர்நிலைகளுடன் ஒரு மாதத்தில் வளர்ந்துவிடும்.
தேன்துளி கரப்பு மற்றும் எறும்புகளின் நடமாட்டம்.
- இந்த பூச்சிகள் தேவைக்கதிகமாக உண்டு விட்டு, கார்போஹைட்டிரேட்ஸ், அமினோ அமிலங்களை தேன்துளி கரப்பாக வெளியேற்றுகின்றன
- தேன்துளி சுரப்பில் அதிக அமினோ அமிலங்கள் மற்றும் சர்க்கரைகள் இருப்பதால், சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகிள்ன நடமாட்டம் இருக்கும்.
- அதிகப்படியான தேன்துளி சுரப்பை அகற்றாவிட்டால், மாவுப்பூச்சிகள் நடமாடுவது சிக்கலாகிவிடும்
- எனவே, தேன்துளி சுரப்பை அடிக்கடி அகிற்ற வேண்டியிருப்பதால், அதை எறும்புகள் செய்கின்றன. அது மட்டுமல்லாமல், மாவுப்பூச்சியை இயற்கை எதிரிகளான பூச்சியின் ஒட்டுண்ணிகள் மற்றும் வேட்டையாடும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. இதனால், எறும்பு மற்றும் மாவுப்பூச்சியின் பிணைப்பு கூட்டுயிர் வாழ்க்கை முறையில் உள்ளது
பரவுதல்
- பயிரிடும் பொருள்கள், தாக்கப்பட்ட பகுதிகள் (அ) பொருட்கள், களை ஒம்புயிரிகள், எறும்புகள் மற்றும் காற்று
ஓம்புயிரி பயிர்கள்
- பல தாவர உண்பவையான மாவுபூச்சி அதைத்து பயிர்களையும் தாக்கும். பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் பூச்சிசெடிகள், ஆண்டுப் பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிப்பயிர்கள் மற்றும் இதர பயிர்கள். மேலும் பலதரப்பட்ட களை ஓம்புயிர்களையும் தாக்குகின்றன. முக்கிய பயிர் இல்லாவிட்டால் கூட களைகளே மாற்று ஒம்புயிரிகளாக செயல்படுகின்றன. முக்கிய ஓம்புயிர்கள் - காட்டாமணக்கு, கொய்யா, ப்ளூமேரியா, அல்பா பருத்தி துவரை, தேக்கு, மரவள்ளி, மோரஸ் வகைகள், சூரியகாந்தி, பழங்கள் மற்றும் காய்கறிகள்.
|