பயிர் பாதுகாப்பு :: பட்டாணி பயிரைத் தாக்கும் நோய்கள் |
ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை பிசி
அறிகுறிகள்:
- செடிகள் தொங்கிக் காணப்படும். தொடர்ந்து உடனடியாக மடியும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, முதிர்வதற்கு முன் உதிர்ந்துவிடும்
- காய் உருவாதலும் பாதிக்கப்படும். கழுத்துப் பகுதியில் செடிகள் வாடி, காய்ந்து, நிறமாற்றம் ஏற்படும்
- நோயுள்ள செடிகளை எளிதில் பிடுங்கலாம்
- நோயுற்ற தண்டை வெட்டிப் பார்க்கும் போது, அடர் பழுப்பு நிறத்தில், நிறமாற்றம் உள்ள வளையம் வாஸ்குலர் திசுக்களைச் சுற்றிக் காணப்படும். வேர் முடிகளிலிருந்து நேரடியாக தாக்குதல் ஏற்படும்
- மண்ணில் இந்த பூஞ்சாண் உயிர் வாழும்
கட்டுப்பாடு:
- காரபண்டாசிம் (2 கிராம் / கிலோ விதை) என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
- காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% மண்ணில் நனையுமாறு இடுதல் வேண்டும்.
|
|
|