பீச் இலை சுருண்டல் நோய்: டாப்ரீனா
அறிகுறிகள்:
- இந்நோய் பாதிப்பால், இலைகள் சுருண்டும், கொப்புளம் போன்று காணப்படும்
- நோயின் ஆறம்பத்தில் இலைகள் மஞ்சளாகவோ, அல்லது சிவப்பாகவோ நிறம் மாறுபட்டு, இலை ஆரம்ப நிலையிலேயே உதிர்ந்துவிடும்
- பாதிக்கப்பட்ட பகுதி இளஞ்சிவப்பாகவோ அல்லது சிவப்பாகவோ காய்ந்திருக்கும்
- மரத்தின் நோய் பாதிப்பால் சாகுபடி குறைந்துவிடும்
கட்டுப்பாடு:
- நோய் தாக்கப்பட்ட தண்டுகளை அகற்றி விட வேண்டும்
- செடிகளில் போர்டியாக்ஸ் கலவை 1% அல்லது கார்பென்டாஸின் 0.1% தெளிக்கவும்
- அறுவடை முன்பு 20 நாட்களுக்கு மேன்கோசெப் 0.25% அளவில் தெளிக்கவும்
|
|