பயிர் பாதுகாப்பு :: மிளகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மேல் தண்டுத் துளைப்பான்: லாஸ்பயிரிஸியா ஹெமிடாக்ஸா
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் இளம் நுண் குருத்துக்களில் துளையிட்டு உள்ளே சென்று தண்டின் உள்ளிருக்கும் திசுக்களை சாப்பிடுவதால் அவைக் கருகி, அழுகி விடும்.
  • நீர்த்தண்டுகள் அதிகமுள்ள மாதங்களான ஜீலை முதல் அக்டோபர் வரை இப்பூச்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

பூச்சியின் விபரம்:

  • புழு: சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் கூட்டுப்புழு தண்டுகளின் துளைகளில் இருக்கும்.
  • சிறிய அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின் முன் இறக்கை முன் பாதி கருப்பாகவும் பின் பாதி சிவப்பாகவும் இருக்கும்.
  • பின் இறக்கை சாம்பல் நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • இளம் துளிர்களின் மீது குவினால்பாஸ் 0.05 சதவிகிதம் தெளிக்கவும். பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க ஒரு மாத இடைவெளியில் (ஜீலை, அக்டோபர்) மீண்டும் பூச்சிக்கொல்லி தெளிக்கவும்.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015