செதில் பூச்சிகள்: லெபிடோசேபஸ் பைப்பரிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- மிளகுக் கொடியின் இலைக்காம்பு, இலை மற்றும் தண்டுப் பகுதிகளின் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
- தாக்கப்பட்ட பகுதி மஞ்சளாக மாறிவிடும். மேலும் வாடிவிடும்.
பூச்சியின் விபரம்:
- லெபிடோசோபஸ் பைப்பரிஸ்: சிறிய கருநிறப் படகு போன்றவை.
- ஏஸபிடியோடஸ் டெஸ்ட்ரக்டார்: மிகச்சிறிய இளம் மஞ்சள் நிறம் கொண்டது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- மிளகுச் செடியின் தாக்கப்பட்ட பகுதிகளைக் களைந்து நீக்கவும்.
- டைமிதோயேட் 0.1 சதவிகிதம் கரைசலை தெளிக்கவும் இரண்டாவது முறையாக 21 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்கவும்.
|
|
|
தாக்கப்பட்ட தண்டு |
இலைகள் வாடிவிடும் |
|