வெள்ளை வால் மாவுப்பூச்சி: பொரீச்யா விர்கேட்டா
சேதத்தின் அறிகுறிகள்:
- நுனித் தண்டு, இலைகள் மற்றும் காய்கள் பகுதியில் மாவுக் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும்.
- செடிகள் மஞ்சளாக மாறி பிறகு காய்ந்துவிடும்.
- காய்கள் உதிர்ந்துவிடும்.
பூச்சியின் விபரம்:
- தாய்ப்பூச்சி இறகற்றது மேலும் வயிற்றுப் பகுதியின் கடைசியில் வெண்ணிற மெழுகு போன்ற இழை இருக்கும்.
- உடல் முழுவதும் மெழுகுப் போன்ற மாவுப் பூச்சி இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தாக்கப்பட்ட பகுதிகளை களைந்து எடுத்து அழிக்கவும்.
- டைமீதோயேட் 2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.
|
|
வெள்ளை வால் மாவுப்பூச்சி |
|