பயிர் பாதுகாப்பு :: மிளகு பயிரைத் தாக்கும் நோய்கள்
பைட்டோப்தோரா தூர் அழுகல் /புதை வாடல் நோய் - பைட்டோப்தோரா கேப்சிசி
அறிகுறிகள்:

அ.பின்னோக்கிக் காய்தல்:

  • எந்த தருணத்திலும் மேல் உள்ள கிளைகள் பாதிக்கப்படும். இதனால் கிளைகள் நிறம் மாறியும், கிளைகளின் மேற்புறம் மற்றும் கீழ்புறம் அழுகியும் பின்னோக்கிக் காய்ந்து விடக் கூடும்.
பின்னோக்கிக் காய்தல பாதிக்கப்பட்ட இலை கழுத்துப்பட்டை அழுகல் வேர் அழுகல்

ஆ.தூர் அழுகல் அல்லது கழுத்துப்பட்டை அழுகல்:

  • நிலமட்டத்திற்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியில் நோய் தாக்கி பின் அழுகி இரண்டில் இருந்து மூன்று நாட்களுக்குள் கொடிகள் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கெட்ட துருநாற்றத்தை ஏற்படுத்தும். அடிப்பகுதியில் உள்ள தண்டுகள் முதலில் காய்ந்து பின் வேர் வரை பரவும்

இ.வேர் அழுகல்:

  • நோய் தாக்குதல் முதலில் முக்கிய வேர் அல்லது ஊட்டு வேரிரை தாக்கும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்து விடும்

கட்டுப்பாடு:

  • திடமான நாற்றங்காலை தேர்வு செய்யவும்
  • நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும்
  • பாதிக்கப்பட்ட செடியை அகற்றிய பின் 1% பார்டியாக்ஸ் கலவையை மண்ணை சொட்டு சொட்டாக நனைக்கவும்
  • 1% போர்டியாக்ஸ் கலவை (அ) 0.25% சி.ஒ.சி.(அ) 0.3% அல்லைட்டை தெளிக்கவும்
  • வேம்பு கேக் மற்றும் ட்ரைக்கோடெர்மா விரிடி (அ)பி ப்ளோரோசென்ஸை மண்ணில் கலந்து இடவும்

Image source: http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/pepper.htm


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015