பயிர் பாதுகாப்பு :: மிளகு பயிரைத் தாக்கும் நோய்கள்
அடைப்பான் நோய் / பொல்லு நோய் - க்ளியோஸ்போரியம் க்ளியோஸ்போரியோட்ஸ்
அறிகுறிகள்:
  • அறிகுறிகள் முதலில் இலைகள் மற்றும் தண்டுகளில் காணப்படும். வட்ட வடிவம் அல்லது நிலையற்ற சாம்பல் நிறப் புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்
  • இலைகளின் மேல் பரப்பில் மைய வளையம் போல் கொப்புளம் தோன்றும். தண்டின் நுனியில் முதலில் நோய் தாக்கப்படும்.  பின் அது கீழ் நோக்கிப் பரவி முழு கொடியையுமே  தாக்கி அழித்து விடும்.
  • இலைக்கணு இடுக்கில் நோய் தாக்கப்பட்டால் அதன் கூர்முனை பாதிக்கப்பட்டு உதிர்ந்துவிடும்
  • முதலில் சதைகனியின் அடிப்பகுதி பழுப்பு நிறத்தில் மாறி பின் படிப்படியாக மேல் பகுதி வரை தாக்கும். பதர் போன்று மாறிவிடும். (பொல்லு என்றால் ஒளிவட்டம்).
வட்ட வடிவம் சாம்பல் நிறப் புள்ளிகள் Concentric rings Grey leaf spot

கட்டுப்பாடு:

  • 1% போர்டியாக்ஸ் கலவையை மூன்று முறை தெளிக்க வேண்டும்.

Image source: http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/pepper.htm


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015