பயிர் பாதுகாப்பு :: அன்னாசி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சி: சூடோகாக்கஸ் பிரிவிப்ஸ்

அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள், பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • மஞ்சளாதல்
  • இலைகள் வாடும்
  • குட்டை வளர்ச்சி
  • பைனாப்பிள் வாடல் நோயை பரப்பும் காரணியாக உள்ளது.

பூச்சியின் விபரம்:

  • பூச்சி – வெள்ளை நிறத்தில் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள ரெட் ஸ்பேனிஷ், குயன் ரகங்களை சாகுபடி செய்தல்
  • நோயற்ற செடிகளை தேர்ந்தெடுத்து பயிரிடுதல்.
  • அடிப்புறத்தில் உள்ள பழுப்பு நிற  இலைகளை அகற்றுதல்
  • பயிரிடப் படக்கூடிய செடிகளின் அடிப்பகுதியை மாலத்தியான் 0.2% கரைசலில் அமிழ்த்தி எடுத்தல்.
  • டைமெத்தோயேட் 2மிலி/லிட்டர் (அ) மீத்தைல் டெமட்டான் 1.5மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
  • காக்ஸி நெல்லிட் வண்டு, கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி 10/மரம் என்ற அளவில் விடுதல்.

 

பழங்களின் மீது மாவுப் பூச்சி
மாவுப் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015