பயிர் பாதுகாப்பு :: பிளம்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள் |
நுண்ணுயிரி பிளவை: சூடோமோனஸ் சிரின்ஜி
அறிகுறிகள்:
- பிளவுகள் தாக்கப்பட்ட மொட்டுகளுக்கு அடியில் பரவும் பிளவுகள் விரைவாக பாதிக்கப்பட்ட இடத்தில் பரவி பின் கீழே பரவும். பிறகு மெதுவாக பக்கத்தில் பரவும்.
- இந்தப் பிளவைகள் பெரிதாக, குறுக்கே காணப்படும். பிளவுகள் உதிரும்போதும், குளிர்காலங்களிலும் தென்படும். ஆனால் இது குளிர்கால முடிவிலும், இளவேனிற் காலத்திற்கு ஆரம்பத்திலும் கண்ணுக்கு தெரியாது.
- பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் குழியாகக் காணப்படும். சிறிது கருப்பு நிறத்தில் காணப்பட்டு மரப்பட்டையை சுற்றியும் பாதிப்படையும், இளவேனிற் பருவத்தில் மரங்கள் ஒடியும். பிசின் உருவாகி மரத்தின் வெளிப்புறம் கசியும்.
- பிளவையினால் புளித்த வாடை ஏற்படும். பேக்டீரியம் வலுவற்ற நோய்க் காரணிகள் மரங்கள் செயலற்ற நிலையில் அல்லது வலுவற்று வளரும் நிலையில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
கட்டுப்பாடு:
- கோடைக்கால முடிவில் அதிகப்படியாக உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். காலம் தாழ்த்தி வளர்ச்சியடைவதும், சதைப்பற்றாக இருப்பதால் நோய் தாக்குதல் எளிதாகப் பரவும். மரங்கள் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும்பொழுது கவாத்து செய்ய வேண்டும். (ஜனவரி மற்றும் பிப்ரவரி).
- மரங்களில் நுண்ணுயிரி பிளவையை மட்டும் விட்டுவிட்டு மீதமுள்ள மரங்களை முழுமையாக வெட்டி விட வேண்டும்.
|
|
|