பிளமில் நுண்ணுயிரி புள்ளிகள்: சேந்தாமோனஸ் கேம்பஸ்ட்ரிஸ் பி.வி. ப்ருனி
அறிகுறிகள்:
- அறிகுறிகள் முதலில் சிறியதாக, வடிவமில்லாத நைவுப்புண்களில் தோன்றும். திசுக்களை சுற்றி மங்கலான பச்சை நிறத்தில் இருந்து ஆழ்ந்த பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.
- ஆரம்ப காலத்தில் முக்கோணத்தில் நைவுப்புண்கள் தோன்றும். பின் அது திசுக்களை சுற்றி ஒளி வட்டம் போல் திசுக்களின் மேல் லேசான நிறத்தில் காணப்படும். உட்பகுதிகளில் உள்ள நைவுப் புண்கள் கருப்பு நிறமாக மாறி வெளியே வரத் தொடங்கும்.
- இந்த நோய் தாக்குதலினால் இலைகள் கிழிந்தும், துப்பாக்கி துளை போன்றும் தோற்றமளிக்கும். இலைகள் அதிகமாக தாக்கப்பட்டதால் நுண்ணுயிரி புள்ளிகள் மஞ்சள் நிறமாக மாறி இலைகள் உதிர்ந்துவிடும்.
- இலைப்புள்ளிகள் இலையின் முனையில் தான் முதலில் உருவாகும். பழத்தில் நோய் தாக்குதல், இலைத் தாக்குதலில் பொதுவானது அல்ல.
- நோய் தாக்குதல் ஏற்பட்டால் சிறிய புள்ளிகள் உருவாகி பிசின் போன்று அந்தப் புள்ளிகளில் இருந்து கசிவு ஏற்படும்.
- அதிகமாக எளிதில் பாதிக்கப்படுகின்ற மெத்திலி மற்றும் சான்ட்டா ரோசா வகைகள் பழங்களை சுலபமாக தாக்கப்படும், மோரிஸ், புரூஸ் அல்லது ஒசார்க் ப்ரீமியர் வகைகளை விட மேற்கூறிய வகைகள் எளிதில் தாக்கப்படும்.
- அதிகப்படியான குளிர்காலங்களில் நுண்ணுயிரிகள் கொம்புகளை தாக்கும்.
கட்டுப்பாடு:
- இரசாயனக் கட்டுப்பாடு பெரிதாக பயனளிக்காது. முன் மற்றும் இறுதி நிலையில் செயலற்று இருக்கும் பொழுது தாமிரத்தை தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம். நிலையான சத்துகள் முக்கியமானவை.
|
|