பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
அனார் வண்ணத்துப்பூச்சி: டியோடிரிக்ஸ்
அறிகுறிகள்
- இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும்.
- பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும்.
- பழங்கள் அழுகும், உதிர்ந்துவிடும்
பூச்சியின் விபரம்
- புழு – அடர் பழுப்பு நிறத்தில், சிறியதாக, தடித்து, சிறிய உரோமங்களால் சூழப்பட்டிருக்கும்.
- பூச்சி – நீலம் கலந்த பழுப்பு நிற வண்ணத்துப் பூச்சி
- பெண் பூச்சி – முன்னிறக்கையில் ‘V’ வடிவ திட்டு காணப்படும்.
கட்டுப்பாடு
- சேதமடைந்த பழங்களை சேகரித்து அழித்தல்
- சாகுபடியை சுத்தமாக மேற்கொள்ளுதல்
- நோய் தாங்கிக் கொள்ளக் கூடிய இரகங்களை பயிரிடுதல்.
- பொருளாதார சேதநிலை – 5 முட்டைகள்/செடி
- பழங்களை பாலித்தீன் பைகளில் கட்டி மூடிவிடவேண்டும்.
- விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைக்கலாம்.
- மாலத்தியான் 50 கிகி 0.1% (அ) டைமெத்தோயேட் 30 கிகி 0.06% பூக்கள் உருவாகும் போது, பழங்கள் உருவாகும் போதும் தெளிக்க வேண்டும்.
- பூக்கள் நிலையில், வேப்பங்கொட்டை சாறு 5% (அ) வேம்பு கலந்த கரைசல் 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
- டைமெத்தோயேட் 30 கிகி 1.5 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
- டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் 1 லட்சம் /ஏக்கர் என்ற அளவில் வயலில் வெளிவிடுதல்.
|
|
|
|