பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பழத்துளைப்பான்: கோனோகீத்தஸ் பங்டிபெரேலிஸ்
அறிகுறிகள்
- இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும்.
- பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும்.
- முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்.
பூச்சியின் விபரம்
- புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ரோமங்களுடன், அடர் நிற தலை மற்றும் முன் மார்பு திட்டுடன் காணப்படும்.
- பூச்சி : மஞ்சள் நிறத்தில், கருப்பு நிற புள்ளிகள் இறக்கை, மற்றும் உடல் முழுவதும் காணப்படும்.
கட்டுப்பாடு
- சேதமடைந்த பழங்களை சேகரித்து, அழித்தல்.
- சாகுபடியை தத்மாக மேற்கொள்ள வேண்டும்.
- விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைத்தல்.
- மாலத்தியான் 50கிகி 0.1% (அ) டைமெத்தோயேட் 30கிகி 0.06% பூக்கும் சமயம், பழங்கள் உருவாகும் சமயம் தெளித்தல்.
|
|
|
|