பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வழுவழுப்பு வெட்டுப்புழு / கருப்பு வெட்டுப்புழு : அக்ராட்டில் இப்சிலான்
தாக்குதலின் அறிகுறிகள்:
இளம் புழுக்கள் இலையின் மேற்தோலை சுரண்டி தின்னும்
வளர்ந்த புழுக்கள் இரவு நேரத்தில் நில வெடிப்புகளில் இருந்து வெளியே வந்து இளஞ்செடிகளின் தண்டுகளை வெட்டுகின்றன
வளர்ந்த புழுக்கள் கிழங்குகளை தின்று சேதப்படுத்தும்
பூச்சியின் விபரம்:
முட்டை: வெண்ணிறத்தில், குவிமாடம் வடிவில் இலைகளின் அடிப்பரப்பில் அல்லது மண்ணில் குவியலாக இடும்.
புழு: முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வளர்ந்த புழுக்கள் வழுவழுப்பாகவும் கருமையாகவும் சிவப்புத்தலையுடனும் இருக்கும்.
கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் மண் கூட்டில் இருக்கும்
பூச்சி: அந்துப் பூச்சி பழுப்பு நிறமுடையது. முன்இறக்கை பழுப்பு நிறமாகவும் அதில் வளைந’த கோடுகளுடனும் கரும் புள்ளிகளும் இருக்கும்.
அறிகுறி
முட்டை
புழு
கூட்டுப்புழு
பூச்சி
கட்டுப்படுத்தும் முறை:
பூச்சிகள் தாக்கப்பட்ட வயல்களை பரவல் பாசணம் செய்து நீர்த்தேக்கம் ஏற்படுத்தவும்
காலை மற்றும் மாலை நேரங்களில் வளர்ந்த புழுக்களை கையால் சேகரித்து அழிக்கவும்
கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை வெளிக் கொணர்ந்து அழிக்கலாம்
ஹெக்டேருக்கு 1 விளக்குப் பொறி அமைக்கவும்.
ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப்பொறி அமைத்து ஆண் அந்துப்âச்சி கவர்ந்து அழிக்கலாம்
குளோர்பைரிஃபாஸ் @1 லிட்டர்/ஹெக்டேர் அல்லது வேப்பம் எண்ணெய்க்கு 3 சதம் தெளிக்கவும்.