பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் :: காய்கறிகள் :: உருளைக்கிழங்கு
வறண்ட அழுகல் நோய் பிசோரியம் சொலானி
அறிகுறி
•        கிழங்கின் தோல் பகுதி காய்ந்து கருப்பு புள்ளிகளுடன் சுருங்கி வடிவமற்ற மற்றும் வடிவமுள்ள சுற்றுவட்ட கோடு போன்று மாறிவிடும்.
•        கிழங்கின் உட்பகுதி வெள்ளை நிறமாக மாறிவிடும்
•        கிழங்கில் நீர்ன் அளவு குறைந்து, காய்ந்து எடை குறைந்து காணப்படும்
 
  குழிந்த மற்றும் சுருங்கிய கிழங்கு கிழங்கினுள் பழுப்பு நிற திசுக்கள் பாதிக்கப்பட்ட கிழங்கு

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
•        பூஞ்சை இழை – கிளைகளுடையது தடுப்புடையது
•        இழை, தோலினுள் நுழைந்து கொப்புளங்களை உருவாக்குகிறது
•        கொப்புளத்தில் இலையானது பின்னி பிணைந்து காணப்படும்

பரவுதல் மற்றும் உயிர் வாழ்தல்
•        மண் வழி பரவும்
•        பூஞ்சையிழை, சிதலகம் மற்றும் பூஞ்சையிழைச் சிதல் ஆகியவை மண்ணில் இருக்கும்
•        சிதலகம் காற்று வழி பரவக்கூடியது.  எனவே சுவர் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் உள்ள கிழங்குகளை எளிதில் தாக்கும்.

தொற்றுநோய் காரணிகள்
•        வெப்பநிலை 15-25°C
•        ஈரப்பதம் 50%

மேலாண்மை
•        கிழங்குகள் சேதமடையாமல் பாரித்துக் கொள்ளவும்
•        கிழங்கை காய வைத்து பின் குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்
•        கிழங்கை 50-70° பாரன்கிட் வெப்பநிலை, நல்ல காற்றேரிட்டம் மற்றும் 95% ஈரப்பதத்தில் இரண்டு வாரம் சேமிக்கவும்

Source of Images:
https://www.agric.wa.gov.au/potatoes/fusarium-dry-rot-potatoes
http://pnwhandbooks.org/plantdisease/potato-solanum-tuberosum-fusarium-dry-rot

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015