பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் ::காய்கறிகள்:: உருளைக்கிழங்கு
பழுப்பு அழுகல் நோய்: ரால்ஸ்டோனியா சோலானாசியேரம்
அறிகுறி
• வலையல் போன்று வெடித்து காணப்படும்
• இலையானது பழுப்பு நிறத்திற்கு மாறி, சுருங்கி விழுந்து விடும்
• தண்டின் உட்புறம் பழுப்பு நிறமாக மாறிவிடும்
• வட்டமான கோடு கிழங்கின் உட்புறத்தில் காணப்படும். இது கடத்துத் திசுக் கற்றைகளின் நிற மாற்றத்தால் ஏற்படுகிறது
• வெள்ளை நிற பாக்டீரிய திரவக் கசிவானது கிழங்கு மற்றும் தண்டுப் பகுதியில் காணப்படும்.
குழல் மய வளையம்
பாக்டீரிய கசிவு வெளியேறுதல்
அழுகிய குழல் மய திசுக்கள்
நோய்க்காரணிஅடையாளப்படுத்துதல்
• கிராம் நெகட்டிவ், சிறிய இரும்பு துண்டு வடிவ பாக்டீரியா
• வித்துக்கள் உருவாவதில்லை
பரவுதல்மற்றும்உயிர்வாழ்தல்
• மண் வெப்பநிலை 25-35°ஊ
• ஈரப்பதம் 50%
• காரத்தன்மை 6.2 – 6.6 மேலாண்மை
• பயிர் சுழற்சி (உருளைக்கிழங்கு – கோதுமை)
• நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இரகத்தை பயன்படுத்தவும் (சோலானம் புருஷரி)