நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
• பூஞ்சை இழை நிறமற்று காணப்படும்
• வித்தகக்காம்பு - பூஞ்சை இழை உள்ளிருந்து கிழங்கின் துளை மூலம் தோன்றுகிறது
• சிதலகம் - பல் உட்கரு உயிரணி, மெல்லிய சுவருடையது, நிறமற்ற கோள வடிவமுடையதுமூ
• இயங்கும் வித்துக்கள் - இரு உணர் கொம்புடையது
பரவுதல் மற்றும் உயிர் வாழ்தல்
• பாதிக்கப்பட்ட கிழங்கு மற்றும் மண் வழி பரவும்
• பூஞ்சை அதிக நாட்கள் மண்ணில் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது
• பாதிக்கப்பட்ட கிழங்குகள் தோட்டத்திலிருந்து, சேமிப்புக் கிடங்கிற்கும் பின் அதை அடுத்து விதையாக பயன்படுத்துவதன் மூலம் பரவுகிறது
நோய்தொற்று
• வெப்பநிலை 12-15°C மற்றும் ஈரப்பதம் 90% க்கும் அதிகமாக இருக்கும் போது வேகமாக பரவும்
மேலாண்மை
• நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இரகத்தை பயிர் செய்யவும்
• கிழங்குகள் சேதமடையாமல் அறுவடை செய்யவும்
• 10-15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து பூஞ்சாண மருந்தினை தௌளிக்கவும்
• பிரிஸ்டன் 600 கிராம் , எக்டர்
• ஜினப்் 0.2%
• போர்டாக்ஸ் கலவை 1.0%
• ஆயnஉடிணநb (2 கிலோ , எக்டர்) |