பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் :: காய்கறிகள் :: உருளைக்கிழங்கு
சொறிநோய் : ஸ்ரெப்டோமைசிஸ் ஸ்கேபிஸ்
அறிகுறி
•        ஆழமற்ற சொறி – தக்கை போன்ற திசுக்கள், கிழங்கின் வெளித்தோள் அடுக்கில் அசாதாரணமாக பெருக்கம் பெறுகிறது. 
•        புண்கள் ஆரோக்கியமான தோலை விட அளவு மற்றும் வடிவில் மாறுபட்டிருக்கும்
•        சொறி புண்கள் 1-3 மிமி ஆழம் இருக்கும்
•        ஆக்டினோமைசிட், இளம் கிழங்குகளை அதிகமாக பாதிக்கும்
கிழங்கில் புண்கள் தக்கை போன்ற புண்கள் குழிவுடைய பொருக்கு குருக்கு பிரிவில் பாதிக்கப்பட்ட பகுதி

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
•        ஆக்டினோமைசிட் சிதலகம் - தடுப்புச்சுவர் உருவாக்கம் மூலம் உருவாகிறது.
•        சுரிதலகம் - உருளை மற்றும் நிறமற்றது

பரவுதல் மற்றும் உயிர் வாழ்தல்
•        முட்டைகோஸ், கேரட், கத்தரி, வெங்காயம், முள்ளங்கியை பாதிக்கிறது
•        பாதிக்கப்பட்ட மண் மற்றும் கிழங்கு மூலம் பரவுகிறது
•        நோய்க்காரணி விலங்குகளின் சொரிமான பாதை மூலம் தொழு உரத்திற்கு பரவுகிறது

மேலாண்மை
•        நோயற்ற நாற்றுக்களை பயன்படுத்தவும்
•        நாற்று நடவின் போது பி.சி.என்.பி (30 கிலோ , எக்டர்) மண் வழி இடவும்
•        நடவிற்கு முன் பசுந்தாள் உரம் இடவும்
•        மெர்குரிக் குரோரைடு 0.1% விதை நேர்த்தி செய்யவும்
•        இரகங்கள் - மெனேமினி, ருஸெட் ரூரல், செப்கோ பயன்படுத்தவும்

Source of Images:
http://ianrpubs.unl.edu/live/g1940/build/g1940.pdf
https://www.rhs.org.uk/advice/profile?pid=230
http://www.agf.gov.bc.ca/cropprot/lateblight.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015