பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் :: காய்கறிகள் :: உருளைக்கிழங்கு
கரணை நோய்:  ஸிய்ன்ச்ய்ட்ரியம் என்டோபயோட்டியம்
அறிகுறி
•        சிறு வெள்ளை தானியம் போன்ற வீக்கம் காணப்படும்
•        கிழங்கில் மிகச் சிறியதாக (அ) பொpயதாகவும் தோன்றும்
•        மென்மையாக, கூழ் போன்று, வெள்ளை நிறமாக தோன்றி பின் கருப்பாக மாறும்
 
  சிறு மணி அமைவு போன்ற வீக்கம் கணுவிலிருந்து புறவளர்ச்சி பாதிக்கப்பட்ட தாவரம்

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
•        பூஞ்சை இழைகளற்றது
•        மெல்லிய சுவர் கொண்ட சிதலகத்தை உற்பத்திசெய்யும்
•        சிதலகம் இயங்கும் வித்துக்களை வெளியிட்டு கிழங்கை தாக்குகிறது

பரவுதல் மற்றும் உயிர் வாழ்தல்
•        ஓய்வுறு சிதல் 20-25 வருடங்கள் மண்ணில் வாழும் தன்மையுடையது
•        கால்நடையின் குடலில் நிலைத்து வாழும்
•        பாதிக்கப்பட்ட உரம், மண் மற்றும் விதைக் கிழங்குகள் மூலம் பரவும்

நோய்தொற்று
•        வெப்பநிலை 16.7 – 17.8° C
•        மண்ணிலுள்ள பிராண வாயு மற்றும் நைட்ரோட்டுகள், சிதலகத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளன

மேலாண்மை
•        நோய் எதிர்ப்புள்ள இரகங்கள் - குப்ரி கான்சார், குப்ரி ஸ்ஹெர்ப், குப்ரி ஜெயொடி
•        மண்ணை நீராவி மூலம் கிருமி நீக்கம் செய்யவும்
•        மண் நேர்த்தி – மெர்குரி குளோரைடு மற்றும் பார்மலின் 5%

Source of Images:
http://fera.co.uk/plantClinic/documents/factsheets/pwd.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015