பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் :: காய்கறிகள் :: உருளைக்கிழங்கு
கார்அழுகல்   மேக்ரோடோமினா பேசியோலினா

அறிகுறி
•        பட்டைத் துளையைச் சுற்றி கருப்பு புள்ளி (2-3 மி.மீ. விட்டம்) மற்றும் நடுவில் வெள்ளை வெள்ளைப் புள்ளி
•        கிழங்கை வெட்டினால் கிழங்கின் மேற்பரப்பில் உள்திசுக்களில் கருப்பு திட்டுக்கள் காணப்படும்

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
•        பூஞ்சை இழை – சிதறி அல்லது பஞ்சு போன்றிருக்கும்
•        பூஞ்சை இழைகள் - கிளைகளுடைய தடுப்புள்ள மற்றும் சாம்பல் கலந்த வெள்ளை (அ) பழுப்பு
•        பூஞ்சை இழை முடிச்சுகள் - மிகச்சிறியது கருப்பு மற்றும் மென்மையானது
•        சிதல் தாங்கியிழை – எளியது மற்றும் கம்பி வடிவமுடையது
•        சிதலகம் - ஓர் உயிரணு உடையது நிறமற்றது.  முட்டை (அ) நீள் வடிவமுடையது

பரவுதல் மற்றும் உயிர் வாழ்தல்
•        முதன்மையான காரணி – மண்ணில் இருக்கும் கிருமி
•        தோலில் ஏற்படும் காயத்தின் மூலம் பூஞ்சை நுழைகிறது
•        பூஞ்சை இழை முடிச்சுகள் - 3 வருடங்களுக்கு மேலாக மண்ணில் நிலைத்து வாழும்

நோய்த் தொற்று
•        ஈர மண்ணில் அதிக பாதிப்பு ஏற்படும்
•        வெப்பநிலை 31°C
மேலாண்மை
•        கிழங்குகள் காயம் படாமல் தவிர்க்கலாம்
•        சேமிப்பு கிடங்கில் குறைந்த வெப்பநிலையில் பராமாpக்கவும்
•        விரைவில் முதிரும் இரகங்கள் - குப்ரி சந்த்ரமுகி, குப்ரி அலான்கர்

உள் திசுக்களில் கருப்பு நிற ஒட்டு

Source of Images:
http://www.sciencephoto.com/media/132767/view


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015