தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைச் சுருள்களில் புழுக்கள் தங்கி, நடு இலைகளை உண்ணுவதால் துவாரங்கள் ஏற்படும்.
- அடி இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி, பிறகு காய்ந்து விடும்.
- துளையிடப்பட்ட துவாரங்களில் பூச்சிகளின் கழிவுகள் அடைத்துக்கொண்டிருக்கும்.
- கதிர் வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை நிறத்தில் தெளிவாகத் தெரியும். இதனால் இந்த கதிர்களை வயலில் எளிதாக கண்டறிய முடியும்.
|
|
|
|
துளைக்குழிகள் பூச்சிகளின் கழிவுகளால் அடைக்கப்பட்டிருக்கும் |
காய்ந்த நடுக்குருத்து காணப்படும் |
தண்டில் மிகச்சிறிய ஓட்டைகள் காணப்படும் |
வெண்கதிர் அறிகுறி |
பூச்சியின் விபரம்:
- முட்டை: இலைகள் மற்றும் தண்டுகளில் பால் வெள்ளை நிறத்தில், உருண்டையான வடிவத்தில் கொத்து கொத்தாக முட்டைகள் காணப்படும். முட்டை வளர்ச்சி காலம் 8 நாட்கள் ஆகும்.
- புழு: இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்தில் மென்மையாக உருளை வடிவத்தில், கருஞ்சிவப்பு நிறத் தலையுடன் கூடிய புழுக்கள் காணப்படும். புழுப்பருவத்தின் காலம் 22 நாட்கள் ஆகும்.
- கூட்டுப்புழு: தண்டுகளில் அடர் பழுப்பு நிறத்தில், தலையில் ஊதா புள்ளியுடன் கூடிய கூட்டுப்புழுக்கள் காணப்படும். கூட்டுப்புழுக்களின் காலம் 8 நாட்கள் ஆகும்.
- பூச்சி: நடுத்தர அளவிலான, மங்கிய மஞ்சள் பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் பயிரில் காணப்படும். முன் இறகுகள் லேசான பழுப்பு நிறத்தில், இரண்டு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். பின் இறகுகள், வெள்ளை நிறத்தில், நரம்புகளில் மஞ்சள் நிற செதில்களுடன் காணப்படும்.
|
|
|
|
முட்டை |
புழு |
கூட்டுப்புழு |
முதிர் பூச்சி |
கட்டுப்படுத்தும் முறைகள்:
- போரேட் 10% CG / எக்டர் என்ற வீதம் 20 நாட்கள் இடைவெளியில் முளைப்பிற்கு பிறகு தெளிக்க வேண்டும்.
|